பயங்கரவாத செயல்கள் முழுமையாக நிறுத்தப்பட்டால்தான், பாகிஸ்தானுடன் பேச்சு நடத்த முடியும் – வெளியுறவுத்துறை அமைச்சர் திருமதி சுஷ்மா ஸ்வராஜ்.  

பயங்கரவாத செயல்கள் முழுமையாக நிறுத்தப்பட்டால்தான், பாகிஸ்தானுடன் பேச்சு நடத்த முடியும் என்று வெளியுறவுத்துறை அமைச்சர் திருமதி சுஷ்மா ஸ்வராஜ்  தெரிவித்துள்ளார். புதுதில்லியில் நேற்று நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், பயங்கரவாதமும் பேச்சுவார்த்தையும் சேர்ந்து பயணிக்க முடியாது என்றும் தெளிவுபடுத்தினார்.

பயங்கரவாதத்துக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கைகளை பாகிஸ்தான் எடுக்க வேண்டுமென்றும், இந்தியாவுக்கு எதிரான தீவிரவாத நடவடிக்கைகளுக்கு ஆதரவளிப்பதையோ நிதியுதவி அளிப்பதையோ முற்றிலுமாகத் தடுப்பதற்கு ஆக்கப்பூர்வமான செயல்பாடுகளை அந்நாடு உறுதி செய்யவேண்டுமென்றும் அவர் கூறினார். பாகிஸ்தான் பிரதமர் திரு இம்ரான் கான், ஜெய்ஷ் ஏ முகமது அமைப்பின்  தலைவர் மசூத் அசாரை இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டுமென்று அவர் வலியுறுத்தினார். பயங்கரவாதப் பிரச்சனையை சர்வதேச சமுதாயத்தின் பார்வையில் இருந்து திசைதிருப்ப பாகிஸ்தான் முயற்சிப்பதாகவும் பயங்கரவாதத்தை ஊக்குவிப்பதை பாகிஸ்தான் தொடர்ந்து செய்து வருவதாகவும் திருமதி சுஷ்மா ஸ்வராஜ் குறிப்பிட்டார்.

 

Pin It