பலுச்சிஸ்தானில் ராணுவ வாகனத்தின் மீது  குண்டுவெடிப்பு  – 8ராணுவ வீரர்கள் உட்பட  15 பேர் உயிரிழப்பு.

பாகிஸ்தான் நாட்டின் பலுச்சிஸ்தான் மாநிலத்தில் ராணுவ வாகனத்தின் மீது நடத்தப்பட்ட குண்டுவெடிப்பு தாக்குதலில் எட்டு ராணுவ வீரர்கள் உட்பட  15 பேர் உயிரிழந்தனர். 24 பேர் காயமடைந்தனர். மாநிலத் தலைநகர் குவெட்டா நகரில் உள்ள பேருந்து நிலையம் அருகே இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. இந்த சம்பவம் குறித்து கருத்து தெரிவித்துள்ள பலுச்சிஸ்தான் மாநில உள்துறை அமைச்சர் திரு மிர் சர்ஃபராஸ், ராணுவ வாகனத்தைக் குறி வைத்து இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாகத் தெரிவித்துள்ளார். இந்த குண்டுவெடிப்பு தாக்குதல் மூலம் ஏராளமான வாகனங்கள் சேதமடைந்துள்ளதாகக் கூறியுள்ளார்.

Pin It