பாகிஸ்தான் சிறுபான்மையினர் வாஷிங்டனில் போராட்டம்

பாகிஸ்தான் விவகாரங்கள் குறித்த செயலுத்தி ஆய்வாளர் டாக்டர் அஷோக் பெஹுரியா அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் பி ராமமூர்த்தி

கடந்த பல்லாண்டுகளாகவே பாகிஸ்தானில் வசித்து வரும் மதச் சிறுபான்மையினருக்கு இழைக்கப்பட்டு வரும் கொடுமைகளுக்கு எதிராக வாஷிங்டன் நகரில் வசித்து வரும் பாகிஸ்தானிய சிறுபான்மையினர் போராடத் துவங்கியுள்ளனர். மொகஜிர், பலுச்சியர், பாஷ்துனியர் போன்ற மதச்சிறுபான்மையினர் பாகிஸ்தான் அரசால் தொடர்ந்து பாகிஸ்தான் அரசால் துன்புறுத்தப்பட்டு வருவதாக வாஷிங்டன் நகரில் கூடிய போராட்டக்காரர்கள் தங்களது கருத்தை வெளிப்படுத்தினர்

முத்தஹிதா குவாமி இயக்கத்தின் அமெரிக்க கிளை மொகஜிர் இனத்தவருக்கு பாகிஸ்தான் அரசாலும் ராணுவத்தாலும் இழைக்கப்படும் கொடுமைகள் குறித்து பத்திரிக்கைகளுக்குப் பேட்டி அளித்துள்ளனர். சிறுபான்மை இனத்தவர் தொடர்ந்து கொலை செய்யப்படுவதையும் காணாமல் போவதையும் எதிர்த்துக் குரல் கொடுத்துள்ள மொகஜிர் இனத்தவர் வெள்ளை மாளிகை முன்பாகவும் மனித உரிமை ஆர்வலர்கள் முன்பாகவும் தங்களது போராட்டத்தை வலுப்படுத்தியுள்ளனர்.

பாகிஸ்தானில் உள்ள சிறுபான்மையினர் தங்களது உரிமைகளுக்காகக் குரல் கொடுத்துள்ளனர். மதச் சிறுபான்மையினருக்கு எதிராக இழைக்கப்பட்டு வரும் கொடுமைகளிலிருந்து தங்களது இனம் காப்பாற்றப்பட சர்வதேச நாடுகளின் உதவி கிடைக்கவேண்டும்  எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சிறுபான்மையினருக்கு எதிரான போராட்டக் குழுக்களுக்குத் தொடர்ந்து பாகிஸ்தான் ராணுவம் ஆதரவு அளித்து வருவது மிகுந்த வேதனை அளிக்கிறது என்று தெளிவு படுத்தினார். பாகிஸ்தான் ராணுவம் போராட்டக் குழுக்களின் ஆதரவுடன் செயல்பட்டு சிறுபான்மையினரின் உரிமைகளையும் நலன்களையும் புறக்கணித்து வருகிறது என்று மொகஜிர், பலுச்சியர், பாஷ்துனியர் போராடி வருகின்றனர்.

பாகிஸ்தான் உளவுத் துறையும் தீவிரவாதக் குழுக்களுக்குத் தொடர்ந்து ஆதரவும் நிதி உதவியும் அளித்து வருவதாகவும் ஆயுதப் பயிற்சியும் அளித்து வருவதாகவும் இந்தியா, ஆப்கானிஸ்தான், இரான் போன்ற நாடுகளின் நலனுக்கு எதிராகவும் போராட்டக் குழுக்கள் செயல்பட்டு வருவதாகவும்  சிறுபான்மையினத்தவர்கள் கருத்து தெரிவித்துள்ளது உலக நாடுகளை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது எனலாம்.

போராட்டக் குழுக்களுக்கு ஆதரவாகச் செயல்பட்டு வரும் பாகிஸ்தான் அரசு சர்வதேச நாடுகளைத் தவறாக வழிநடத்தி வருவதாக சிறுபான்மையினர் தங்களது போராட்டத்தின் போது அறிவித்தனர். பல்வேறு நாடுகளிலிருந்து நிதியுதவி பெற்று வரும் பாகிஸ்தான் அரசு அந்நிதியை முறையாகச் செலவிடாமல் தீவிரவாதச் செயல்களுக்குப் பயன்படுத்தி வருவதாகச் சிறுபான்மையினத்தவர் குற்றம் சுமத்தியுள்ளனர்.

முத்தஹிதா குவாமி இயக்கத்தின் அமெரிக்கக் கிளைத் தலைவர் பேசுகையில், அமெரிக்க அரசின் நிதியுதவி, தேவையற்ற வழிகளில் தீவிரவாதிகளுக்காகப் பயன்படுத்தப்படுவதால், அமெரிக்க அரசு சிறுபான்மையினரின் கோரிக்கைகளை விவாதித்து  நிதியுதவியை ஒழுங்குபடுத்த வேண்டும் எனக் கூறினார்.

பலுச்சி இனத்தவருக்குச் சட்ட உரிமைகள் மறுக்கப்படுவதாகவும் தொடர்ந்து கொடுமைகள் இழைக்கப்படுவதாகவும் பலுச்சி தேசிய இயக்கத்தின் தலைவர்கள் விவாதித்தனர். பலுச்சிஸ்தான் பகுதி வன்முறையின் மூலம் பாகிஸ்தான் அரசுடன் இணைக்கப்பட்டதாகவும் அவர்கள் தெளிவுபடுத்தினர். அமைதியை நிலைநாட்டுவேன் என்று கூறிவரும் பிரதமர் இம்ரான்கான், பாகிஸ்தான் ராணுவத்தின் கைப்பாவையாகச் செயல்பட்டு வருகிறார் என்றும் அவர் தீவிரவாதக் குழுக்களுக்கு ஆதரவாகச் செயல்பட்டு வருகிறார் எனவும் பலுச்சி இனத்தவர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

மனித உரிமைகளும் அரசியல் சாசன உரிமைகளும் பாகிஸ்தானில் சிறுபான்மை இனத்தவர்க்குத் தொடர்ந்து மறுக்கப்பட்டு வருகின்றன எனக் கூறினால் அது மிகையாகாது.

 

 

Pin It