பாகிஸ்தானில் சிறை பிடிக்கப்பட்ட 26 இந்திய மீனவர்கள் விடுவிப்பு.

பாகிஸ்தான் சிறைகளில் தண்டனை அனுபவித்து வந்த 26 இந்திய மீனவர்களை நல்லெண்ண  அடிப்படையில்  பாகிஸ்தான் அரசு விடுதலை செய்துள்ளது. இந்த மீனவர்கள் அனைவரும்  பாகிஸ்தான் கடற்பகுதியில் மீன் பிடித்ததாகக் குற்றம்  சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டனர். கராச்சி சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட அவர்கள், லாகூருக்கு அழைத்துச் செல்லப்பட்டிருப்பதாகவும், அங்கிருந்து வாகா எல்லைக்கு அவர்கள் இன்று அழைத்து வரப்பட்டு இந்திய அதிகாரிகளிடம்  ஒப்படைக்கப்படுவார்கள்  எனவும், பாகிஸ்தான்  ஊடகங்கள்  செய்தி வெளியிட்டுள்ளன.

Pin It