பாகிஸ்தானில் மனநோய் பாதித்த கைதிகளைக் கண்மூடித்தனமாக் கொல்வதை நிறுத்த வேண்டும்  – ஐநா நிபுணர்கள்.

பாகிஸ்தானில் மனநோய் பாதித்த கைதிகளைக் கண்மூடித்தனமாக் கொல்வதை நிறுத்த வேண்டும் என்று ஐநா நிபுணர்கள் பாகிஸ்தான் அரசை கேட்டுக்  கொண்டுள்ளனர். 2003ஆம் ஆண்டு தனது ஊழியரை கொலை செய்த குற்றத்திற்காக மரண தண்டனை விதிக்கப்பட்ட  கிசார் ஹயாத் என்பவரது மரண தண்டனையை பாகிஸ்தான் உச்சநீதிமன்றம் நேற்று முன்தினம் நிறுத்தி வைத்தது.  அவர் தூக்கிலிடப்படுவதற்கு முன்னதாக இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. 2008-ல் இந்த நபர் சிசோஃபிரினியா என்ற மன நோயால் பாதிக்கப்பட்டிருப்பதாக அரசு மருத்துவர்கள் தெரிவித்திருந்தனர். மன நோய் பாதித்த நபர்களுக்கு மரண தண்டனை விதிப்பது பாகிஸ்தானின் சர்வதேச பொறுப்புகளை மீறிய செயல் என்று, நீதிக்குப்புறம்பான மரண தண்டனைகள், மாற்றுத்திறனாளி உரிமைகள்  ஐநா நிபுணர் ஏகனஸ் கலாமார்டு கூறியிருக்கிறார்.

Pin It