பாகிஸ்தானில் 284 அரசியல் கட்சிகளின் அங்கீகாரம் ரத்து – பாகிஸ்தான் தேர்தல் ஆணையம் உத்தரவு

பாகிஸ்தானில் எஃப் எம் எல், எம் கியூ எம் பாகிஸ்தான் உள்ளிட்ட 284 அரசியல் கட்சிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.  கடந்த ஆண்டு நிறைவேற்றப்பட்ட தேர்தல் சட்டத்தின்படி இந்தக் கட்சிகள் செயல்படவில்லை என்று கூறித் தேர்தல் ஆணையம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.   சுமார் இரண்டாயிரம் உறுப்பினர்களின் பெயர்களையும் அவர்களுடைய கையொப்பத்தையும் வாக்காளர் உரிமை அட்டையையும் வழங்காத கட்சிகள் இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளன.  அங்கீகாரம் ரத்து செய்யப்பட்ட கட்சிகள் அடுத்த 30 நாட்களுக்குள் மேல்முறையீடு செய்யலாம் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

Pin It