பாகிஸ்தான் தேர்தலில் வாக்குச்வாடிகளின் உள்ளே ராணுவ வீரர்களை நிறுத்திவைக்கும்  முடிவு – முன்ளான் பிரதமர் திரு நவாஸ் ஷெரீஃப் எதிர்ப்பு.   

பாகிஸ்தான் தேர்தலின்போது, வாக்குச்வாடிகளின் உள்ளே ராணுவ வீரர்களை நிறுத்திவைக்கும் அந்நாட்டுத் தேர்தல் ஆணையத்தின் முடிவை முன்ளான் பிரதமர் திரு நவாஸ் ஷெரீஃப் குறை கூறியுள்ளார். இம்மாதம் 25 ஆம் தேதி நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் முடிவுகளை சாதகமாக்கிக் கொள்ளும் முயற்சிகள் அனைத்தையும் தமது கட்சி எதிர்க்கும் என்று கூறினார். லண்டனில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தாமும், தமது மகள் மரியமும் வரும் வெள்ளிக்கிழமை பாகிஸ்தான் திரும்ப இருப்பதாகத் தெரிவித்தார். 68 வயதான, 3 முறை பிரதமராக இருந்த திரு நவாஸ் ஷெரீஃப், சென்ற ஆண்டு பனாமா ஆவணங்கள் வழக்கில் அந்நாட்டு உச்சநீதிமன்றத்தினால் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். அவர் பிஎம்எல்-என் கட்சியின் தலைவராகத் தொடருகிறார்.

Pin It