பாதுகாப்புக் கண்காட்சிக்கு ஒத்துழைப்பு அளித்த தமிழக அரசுக்கு நிர்மலா சீதாராமன் நன்றி

பாதுகாப்புக் கண்காட்சி சிறப்பாக நடைபெற ஒத்துழைப்பு அளித்த தமிழக அரசுக்கு அத்துறைக்கான அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் நன்றி தெரிவித்துள்ளார். சமூக வலைதளத்தில் இக்கருத்தைப் பதிவு செய்துள்ள அவர், சென்னையை அடுத்த திருவிடந்தையில் நடந்த இந்தக் கண்காட்சிக்கு ஆதரவு அளித்த தமிழக மக்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாகக் குறிப்பிட்டுள்ளார். தன்னார்வத் தொண்டர்களாகப் பணியாற்றிய கல்லூரி மாணவர்களுக்கும் பாராட்டுத் தெரிவித்துக் கொள்வதாக அவர் கூறியுள்ளார். இந்தக் கண்காட்சியை ஒட்டி நிறுத்தப்பட்டிருந்த போர்க் கப்பல்களை 71,410 பேர் பார்வையிட்டுள்ளதாகவும் திருமதி நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

Pin It