பாதுகாப்புத்துறை அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் ஃபிரான்ஸ் நாட்டிற்கு 3 நாள் அரசுமுறைப் பயணம்.

பாதுகாப்புத்துறை அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் ஃபிரான்ஸ் நாட்டிற்கு 3 நாள் அரசுமுறைப் பயணமாக இன்று புறப்பபட்டுச்  சென்றார். ஃபிரான்ஸ் பாதுகாப்புத்துறை அமைச்சர் திருமதி ஃபிலாரன்ஸ் பார்லேவுடன் அவர் இருதரப்பு உறவுகள்  குறித்தும், பாதுகாப்புத் துறையில்  ஒத்துழைப்பை அதிகரிப்பது குறித்தும்  பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். கடந்த மார்ச்  மாதம் பிரான்ஸ்  அதிபர்; திரு இமானுவேல் மேக்ரூன் இந்தியாவில் பயணம் மேற்கொண்டபோது, பயங்கரவாதத்தை ஒடுக்குவதில் இணைந்து செயல்பட இருநாடுகளும் ஒப்புக் கொண்டன. பாதுகாப்புத்  துறையில் ஒத்துழைப்பை அதிகரிப்பது தொடர்பான ஒப்பந்தங்களும் அப்போது கையெழுத்தானது குறிப்பிடத்தக்கது.

Pin It