பிபிஐஎன் முன்னெடுப்புத் திட்டத்தை ஒப்புதலுக்காக, மேலவையில் பூட்டான் அரசு தாக்கல்.

பிபிஐஎன் எனப்படும் பங்களாதேஷ் – பூட்டான் – இந்தியா – நேபாளம் முன்னெடுப்புத் திட்டத்தை, ஒப்புதலுக்காக,, மேலவையில் பூட்டான் அரசு தாக்கல் செய்துள்ளது. பூட்டான் பிரதமர் டாக்டர் லோடே ஷெரிங் அவர்களின் பங்களாதேஷ் பயணத்தின்போது, செய்தியாளர்களை சந்தித்த பங்களாதேஷ் வெளியுறவுத் துறை செயலர் ஷாஹிதுல் ஹக் அவர்கள், இப்பிராந்தியத்தின் ரயில் மற்றும் சாலை இணைப்புக்களை விரிவுபடுத்தும் மிகப்பெரிய திட்டம் இந்த பிபிஐஎன் முன்னெடுப்புத் திட்டம் என்றும், இதற்கான ஒப்புதலை பூட்டான் நாடாளுமன்றம் விரைவில் வழங்கும் எனத் தான் நம்புவதாகவும் தெரிவித்தார்.

Pin It