பிபின் ராவத் மூன்று நாள் பயணமாக காத்மண்டு சென்றுள்ளார்.

இந்திய ராணுவ தலைமை தளபதி  ஜென்ரல் பிபின் ராவத் 3 நாள் அரசுமுறைப் பயணமாக நேபாள தலைநகர் காத்மாண்டூ சென்றுள்ளார். அங்கு நேபாள நாட்டின் ராணுவ அமைப்பு தொடங்கப்பட்டு  250 ஆண்டுகள் நிறைவு செய்ததைக் கொண்டாடும் வகையில் இன்று நடைபெறும் ராணுவ தினத்தில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்கிறார்.  இந்திய – நேபாள ராணுவத்தினரிடையே சிறப்புத்  தருணங்களின் போது ராணுவத் தலைமைத் தளபதிகளுக்குப் பரஸ்பரம் அழைப்பு விடுப்பது பாரம்பரியமாகக் கடைபிடிக்கப்படுகிறது.

Pin It