பிரக்ஸிட் விவகாரம் தொடர்பாக,  இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் ஏற்பட்டுள்ள முடக்கத்திற்குத் தீர்வுகாண பொதுத் தேர்தல் நடத்தப்பட வேண்டும்  – எதிர்க்கட்சித் தலைவர் திரு ஜெரீமி கோர்பின்.

பிரக்ஸிட் விவகாரம் தொடர்பாக இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் ஏற்பட்டுள்ள முடக்கத்திற்குத் தீர்வுகாணும் வகையில், பொதுத் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று அந்நாட்டின் முக்கிய எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சித் தலைவர் திரு ஜெரீமி கோர்பின் வலியுறுத்தியுள்ளார். வேக் ஃபீல்டு நகரில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், தமது கட்சி ஆட்சிக்கு வந்தால், இந்த ஒப்பந்தம் தொடர்பாக பிரசல்ஸூடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்றார்.

Pin It