பிரதமருக்கான பொருளாதார ஆலோசனைக் குழுக் கூட்டம் – பொருளாதார வளர்ச்சியை விரைவு படுத்தும் நடவடிக்கைகள் கண்டறியப்ப்பட்டன. 

பிரதமருக்கான பொருளாதார ஆலோசனைக்  குழுவின் முதலாவது கூட்டம் நேற்று புதுதில்லியில் நடைபெற்றது.  பொருளாதார வளர்ச்சியை அடுத்த 6 மாதங்களுக்குள் மேலும் விரைவு  படுத்துவதற்கு மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கைகளை திரு பிபேக் தேப்ராய் தலைமையிலான இந்தக் குழு கண்டறிந்துள்ளது.   வேலை  வாய்ப்புகளை அதிகரிப்பது உள்ளிட்ட  பத்து அம்சங்கள் இதில் அடங்கும்.                 செலாவணி தொடர்பான பிரச்சினையை ஆய்வு செய்வதற்கு முன்னர், ரிசர்வ் வங்கி மற்றும் செலாவணிக் கொள்கைக் குழுவிடம் ஆலோசனை நடத்தவுள்ளதாகவும் இந்தக் குழு தெரிவித்துள்ளது.  வரும் நிதியாண்டிற்கான மத்திய  அரசின் பொது பட்ஜெட்டில் மேற்கொள்ளவேண்டிய அம்சங்கள் குறித்துக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாக திரு பிபேக் தேப்ராய்  செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.  பொருளாதார நிலையில் ஏற்பட்டுள்ள தேக்க  நிலைக்கான காரணங்களைக் கண்டறிவதில் குழுவின் உறுப்பினர்களிடையே ஒருமித்த கருத்து எட்டப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.  பொருளாதாரத்தைக் கண்காணிக்கும் கட்டமைப்பை ஏற்படுத்துவது குறித்தும் விவாதிக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.  இந்தக் கூட்டத்தில் முதன்மைப் பொருளாதார ஆலோசகர் திரு அரவிந்த் சுப்பிரமணியன், விரிவான அறிக்கையை சமர்ப்பித்தார்.

Pin It