பிரதமர் திரு நரேந்திர மோதி, வரும் திங்கட்கிழமை ரஷ்யா பயணம்.

பிரதமர் திரு நரேந்திர மோதி, தமது ரஷ்யப் பயணத்தின்போது அந்நாட்டு அதிபர் திரு விளாடிமிர் புட்டினுடன் சர்வதேச,  பிராந்திய விஷயங்கள் குறித்து ஆலோசனை நடத்தவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. வரும் திங்கட்கிழமை ரஷ்யா செல்லும் பிரதமர் திரு நரேந்திர மோதி, சோச்சி நகரில் நடைபெறும் முறைசாரா உச்சி  மாநாட்டில் ரஷ்ய அதிபரை சந்தித்து பேச்சு நடத்தவுள்ளார். ஷhங்காய் ஒத்துழைப்பு அமைப்பு, பிரிக்ஸ் அமைப்பு ஆகியவற்றில் மேலும் ஒத்துழைப்பை அதிகரிப்பது தொடர்பாக இந்த சந்திப்பின்போது இருவரும்  ஆலோசனை நடத்துவார்கள்  என்று புதுதில்லியில் மத்திய அரசு  வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. பொருளாதார, வர்த்தக உறவுகளை மேலும் வலுப்படுத்துவது தொடர்பாகவும் இரு தலைவர்களும்  விவாதிக்கவுள்ளனர். சர்வதேச விவகாரங்கள்  தொடர்பாகவும், தொலைநோக்குப் பார்வையின்  அடிப்படையிலும் இருதலைவர்களும் பேச்சு நடத்தவுள்ளதாகவும், இது இருநாடுகளுக்கும் முக்கியமானதாக அமையும்  என்றும்  வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Pin It