பிரதமர் திரு நரேந்திர மோதி, ரஷ்ய அதிபர் திரு புடின் ஆகியோர் இருதரப்புக் கூட்டுறவு குறித்து விவாதம்.

பாதுகாப்பு, பயங்கரவாத எதிர்ப்பு உள்ளிட்ட விஷயங்களில் இருதரப்புக் கூட்டுறவு குறித்து, பிரதமர் திரு நரேந்திர மோதியும், ரஷ்ய அதிபர் புடின் அவர்களும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு விவாதித்தனர். சிறப்பு வாய்ந்த, செயலுத்திக் கூட்டுறவில் இருநாடுகளும் கடந்த ஆண்டு படைத்துள்ள சாதனைகள் குறித்து இரு தலைவர்களும் பாராட்டுக்களைத் தெரிவித்தனர். கடந்த ஆண்டு மே மாதம் ஸோசி நகரிலும், பின்னர் வருடாந்திர உச்சி மாநாட்டில் பங்கேற்க புடின் அவர்கள் புது தில்லி வந்த போதும் இரு தலைவர்களுக்குமிடையே நடைபெற்ற வெற்றிகரமான விரிவான விவாதங்களை நினைவு கூர்ந்த இரு தலைவர்களும், இருதரப்பு நல்லுறவை சீராகத் தொடர ஒப்புக் கொண்டனர். வரும் செப்டமபர் மாதம் நடைபெறவிருக்கும் கிழக்கத்திய, பொருளாதார உச்சிமாநாட்டில் பங்கு பெறுமாறு, பிரதமர் திரு நரேந்திர மோதிக்கு புடின் அவர்கள் மீண்டும் அழைப்பு விடுத்தார். இருநாடுகளும் ஐ.நா., பிரிக்ஸ், எஸ்சிஓ மற்றும் பிற பல்நிலை அமைப்புக்களில் தொடர்ந்து ஆலோசித்து இணைந்து செயலாற்ற ஒப்புக் கொள்ளப்பட்டது.

Pin It