பிரதமர் திரு நரேந்திர மோதி இன்று தமிழகம், ஆந்திரா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை தொடங்கி வைக்க உள்ளார்.

பிரதமர் திரு நரேந்திர மோதி இன்று தமிழகம், ஆந்திரா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை தொடங்கி வைக்க உள்ளார்.  தமிழகத்தில் திருப்பூரில் நடைபெறும் நிகழ்ச்சியில், இஎஸ்ஐ மருத்துவமனை கட்டுமானப்பணிகளைத் தொடங்கி வைக்கிறார்.  இந்நிகழ்ச்சியின்போது, காணொலி காட்சி மூலம் திருச்சி விமான நிலையத்தில் ஒருங்கிணைந்த கட்டிடத்திற்கான கட்டுமானப் பணிகளையும் சென்னை விமான நிலையத்தில் நவீனமயமாக்கல் பணிகளையும் அவர் தொடங்கி வைக்கிறார்.

சென்னையில் கட்டப்பட்டுள்ள இ எஸ் ஐ மருத்துவமனையையும். எண்ணு}ர் துறைமுகத்தில் தானியங்கி முனையத்தையும் அவர் நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். சென்னை துறைமுகத்திலிருந்து மணலியில் உள்ள பெட்ரோலிய சுத்திகரிப்பு நிலையத்திற்கு கச்சா எண்ணெய் கொண்டு செல்வதற்கான குழாய் அமைக்கும் பணியையும் பிரதமர் தொடங்கி வைக்கிறார்.

சென்னை டி எம் எஸ் – வண்ணாரப்பேட்டை இடையே மெட்ரோ ரயில் போக்குவரத்தையும் திரு நரேந்திரமோதி காணொலி காட்சி வாயிலாக தொடங்கி வைக்கவுள்ளார். அதன்பின்னர் ஆந்திர மாநிலம் செல்லும் அவர், குண்டூரில் ஒன்று புள்ளி மூன்று மூன்று மில்லியன் மெட்ரிக் டன் சேமிப்பு கொண்ட  விசாகப்பட்டினம் பெட்ரோலிய கிடங்கை நாட்டிற்கு அர்ப்பணிக்கிறார். கிருஷ்ணாபட்டினத்தில் பாரத் பெட்ரோலிய கழகத்தின் புதிய முனையத்திற்கு அவர் அடிக்கல் நாட்டுகிறார்.

பின்னர் கர்நாடக மாநிலம் ஹுப்ளியில் அமைக்கப்படவுள்ள இந்திய தொழில்நுட்பக்கழகம், இந்திய தகவல் தொழில்நுட்பக்கழகம் ஆகியவற்றுக்கு பிரதமர்  அடிக்கல் நாட்டுகிறார்.  மங்களூர் மற்றும் படூரில் அமைக்கப்பட்டுள்ள பெட்ரோலிய சேமிப்பு கிடங்கையும் நாட்டிற்கு பிரதமர் அர்ப்பணிக்கிறார்.

Pin It