பிரதமர் திரு நரேந்திர மோதி, இரண்டு நாள் பயணமாக இன்று உத்தரப்பிரதேச மாநிலத்திற்குச் செல்கிறார்.

பிரதமர் திரு நரேந்திர மோதி இரண்டு நாள் பயணமாக இன்று உத்தரப்பிரதேச மாநிலத்திற்குச் செல்கிறார். பிரதமரின் இந்த சுற்றுப் பயணத்தின்போது வாரணாசி, அஸம்கார், மற்றும் மிர்சாபூர் மாவட்டங்களில் மேற்கொள்ளப்படவுள்ள பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை  அவர் தொடங்கி வைக்கிறார்.

அஸம்காரில் 340 கிலோ மீட்டர் தொலைவுக்கு அமைக்கப்படவுள்ள பூர்வாஞ்சல் விரைவு சாலைத் திட்டத்திற்கு இன்று பிரதமர் திரு நரேந்திர மோதி அடிக்கல் நாட்டுகிறார். பல்வேறு முக்கிய நகரங்கள் வழியாக தில்லி, உத்தரப்பிரதேச மாநிலங்களுக்கு இடையே இந்த விரைவு சாலை அமைக்கப்பட உள்ளது. இந்த விரைவுசாலை அமைக்கப்பட்டவுடன், புதுதில்லி, உத்தரப் பிரதேசத்தின் நொய்டா முதல் காஸிப்பூர் வரையிலான பல பெரிய நகரங்களுடன் சாலை இணைப்பை பெறும்.

வாரணாசியில்  900 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு முக்கியத் திட்டப் பணிகளையும் பிரதமர் தொடங்கி வைக்கிறார். வாரணாசி நகர எரிவாயு வினியோகத் திட்டம், வாரணாசி – பாலியா மின்சார ரயில் போக்குவரத்து ஆகியவற்றைப் பிரதமர் திறந்து வைக்கிறார். அதிநவீன நகரங்கள் இயக்கம், நமாமி கங்கை திட்டம் ஆகியவற்றின்கீழ் பல திட்டங்களையும், பன்ச்கோஷி பரிக்கிரமா மார்கிற்கும் அவர் அடிக்கல் நாட்டுகிறார். சர்வதேச மாநாட்டு மையத்திற்கும் அடிக்கல் நாட்டும் பிரதமர், உத்தரப் பிரதேச முதலமைச்சர் வெளியிடும் மேரி காசி என்ற நூல் வெளியீட்டு நிகழ்ச்சியிலும் பங்கேற்கிறார். நாளை அவர் மிர்சாப்பூர் சென்று பன்சாகர் கால்வாய்த் திட்டத்தை நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். மிர்சாப்பூர் மருத்து்வக் கல்லூரிக்கும் அவர் அடிக்கல் நாட்டுகிறார். மாநிலத்தில் 108 மக்கள் மருந்து மையங்களையும் பிரதமர் திறந்து வைக்கிறார்.

Pin It