பிரதமர் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் வட்டி மானியத்துக்கான தகுதி நெறிகளை மாற்றி அமைக்க அமைச்சகம் அனுமதி.

பிரதமர் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் வட்டி மானியத்துக்கான தகுதி நெறிகளை மாற்றி அமைக்க மத்திய வீட்டு வசதி நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது. இதன்படி நடுத்தர வருமான குழுவினர் வாங்கும் வீடுகளுக்கு கடன் இணைந்த மானிய திட்டத்தில் வட்டி மானியம் பெற நிர்ணயிக்கப்பட்ட வாழிடப்பரப்பு 120 சதுர மீட்டரில் இருந்து 160 சதுர மீட்டராக உயர்த்தப்பட்டுள்ளது. எம்ஐஜி  இரண்டு குழுவினரைப் பொருத்தவரை, இந்தப் பரப்பு 150 சதுர மீட்டரில் இருந்து 200 சதுர மீட்டராக உயர்த்தப்பட்டுள்ளது.

Pin It