பிரான்ஸ் அதிபர் திரு இம்மானுவேல் மேக்ரன், ரஷ்ய அதிபர் திரு விளாடிமிர் புட்டினுடன் இருதரப்பு உறவுகள் குறித்து ஆலோசனை.

பிரான்ஸ் அதிபர் திரு இம்மானுவேல் மேக்ரன், ரஷ்ய அதிபர் திரு விளாடிமிர் புட்டினுடன் இருதரப்பு உறவுகள் குறித்து தொலைபேசியில் ஆலோசனை நடத்தினார். அண்மையில் பிரான்ஸ் அதிபராக பதவியேற்ற திரு மேக்ரன், நேற்று முதல்முறையாக அமைச்சரவைக் கூட்டத்தை கூட்டி, பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதித்தார்.  அதை தொடர்ந்து ரஷ்ய அதிபர் திரு புட்டினை தொலைபேசியில் தொடர்பு கொண்டு தீவிரவாதத்தை ஒடுக்குவது உள்ளிட்ட பல்வேறு சர்வதேச பிரச்னைகள் குறித்து விவாதித்தார்.  இந்த பேச்சுவார்தையின்போது  இருநாடுகளுக்கும் இடையேயான பொருளாதாரம் மற்றும் கலாச்சார உறவுகளை மேம்படுத்துவது குறித்து இருதலைவர்களும் ஆலோசித்தனர்.

 

Pin It