பிரிமியர் பேட்மின்டன் லீக்  போட்டி  –  பெங்களூரு ராப்டர்ஸ் அணிக்கு முதன்முறையாக சாம்பியன் பட்டம்.

பிரிமியர் பேட்மின்டன் லீக்  போட்டி சாம்பியன்  பட்டத்தை பெங்களூரு ராப்டர்ஸ் அணி முதல்  முறையாக வென்றுள்ளது. பெங்களூருவில் நேற்று நடைபெற்ற இ.றுதிப்  போட்டியில் இந்த அணி மும்பை ராக்கெட்ஸ் அணியை  4-3 என்ற ஆட்டக் கணக்கில் வென்றது.

ஆடவர் ஒற்றையர் போட்டியில் பெங்களூரு ராப்டர்ஸ்  அணித் தலைவர் கிடாம்பி ஸ்ரீகாந்த், உலகத்தர  18ஆம் நிலை வீரர், ஆண்டர்சனை வென்றார். மகளிர் ஒற்றையர்  போட்டியில் இந்த அணியின் உ தி தாங்கும்,  ஆடவர் இரட்டையர் போட்டியில் பெங்களூரு அணியின் முகமது ஆசான், ஹென்ரா சத்யவான் இணையும் வெற்றி பெற்றது. முன்னதாக, கலப்பு இரட்டையர் போட்டியில், மும்பை ராக்கெட்ஸ்  அணியின் கிம் ஜீ ஜங்-பியா ஜெபாடியா இணை, பெங்களூரு அணியின் மார்க்கஸ்  எல்லீஸ்-லாரன்ஸ் ஸ்மித் இணையை வென்றது.

Pin It