பிளாஸ்டிக் உற்பத்தியாளர்கள்  இதர தொழில் புரிவதற்கு வங்கிகள் கடனுதவி வழங்க வேண்டும் – முதலமைச்சர் திரு எடப்பாடி பழனிசாமி.

பிளாஸ்டிக் உற்பத்தியாளர்கள்  இதர தொழில் புரிவதற்கு வங்கிகள் கடனுதவி வழங்க வேண்டும் என்று முதலமைச்சர் திரு எடப்பாடி பழனிசாமி கேட்டுக் கொண்டுள்ளார். நேற்று சென்னையில் நிகழ்ச்சியொன்றில்  பேசிய அவர், ஒருமுறை  மட்டுமே பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களுக்குத் தமிழக அரசு தடை விதித்திருப்பதை சுட்டிக்காட்டினார்.

பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றானவற்றை உற்பத்தி செய்யும் மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கும் கடனுதவி வழங்கப்பட  வேண்டியதன் அவசியத்தை அவர்  வலியுறுத்தினார். இந்நிகழ்ச்சியில் பேசிய துணை முதலமைச்சர் திரு ஓ பன்னீர் செல்வம், தேனி, விருதுநகர் உட்பட, 10 மாவட்டங்களில் அமையவுள்ள உணவுப் பூங்காக்கள் மூலம், கூடுதல் வேலைவாய்ப்புக்கள் உருவாக்கப்படும் என்றார்.

Pin It