பி எம்  நரேந்திர  மோதி என்ற வரலாற்றுத் திரைப்படத்திற்கு தேர்தல்  ஆணையம் விதித்த தடையை நீக்க முடியாது – உச்ச  நீதிமன்றம்.

பி எம் நரேந்திர மோதி என்ற வரலாற்றுத் திரைப்படத்திற்கு அடுத்த மாதம் 19 ஆம் தேதி வரை தேர்தல்  ஆணையம் விதித்த தடையை நீக்க முடியாது என்று  உச்ச  நீதிமன்றம் இன்று  அறிவித்தது. தலைமை  நீதிபதி திரு ரஞ்ஜன் கோகோய் தலைமையிலான அமர்வு இதனை அறிவித்தது. இந்த வழக்கில் ஆஜரான  படத் தயாரிப்பாளரின் வழக்கறிஞர், ஏற்கனவே மத்திய திரைப்பட சான்றிதழ் வாரியம்  அனுமதி  அளித்துள்ள  நிலையில், தேர்தல் ஆணையத்தின் உத்தரவு முரண்பாடானது  என  வாதி.ட்டார். ஏற்கனவே, இந்தத் திரைப்படத்தை  முழுமையாகப் பார்வையிட்டு அறிக்கை அளிக்குமாறு  உச்ச  நீதிமன்றம் தேர்தல் ஆணையத்தைப் பணித்திருந்தது.

Pin It