புகழ் பெற்ற பரத நாட்டியக் கலைஞர் மற்றும் ஆராய்ச்சியாளர், கலைமாமணி ஜாகிர் ஹுசேன்.

புகழ் பெற்ற பரத நாட்டியக் கலைஞர் மற்றும் ஆராய்ச்சியாளர், கலைமாமணி ஜாகிர் ஹுசேன் அவர்கள், தென்னிந்தியாவின் பாரம்பரிய இஸ்லாமியக் குடும்பத்தில் பிறந்தவர். சேலத்தில் ஃபைபர் டெக்னாலஜி துறையில் பட்டம் பெற்றவர். சென்னையில் புகழ் பெற்ற நாட்டியக் கலைஞர் சித்ரா விஸ்வேஸ்வரன் மற்றும் கலாக்ஷேத்திராவின் திருமதி கிருஷ்ணவேணி லக்ஷ்மணன் ஆகியோரிடம் முறைப்படி நடனம் பயின்று தேர்ந்தவர். ராமாயணம், மகாபாரதம் போன்ற இதிகாசங்களை நன்கு அறிந்த இவர், அவற்றையொட்டிப் பல நாட்டிய நிகழ்ச்சிகளை உருவாக்கியுள்ளார். பல்துறை வல்லுனராக விளங்கும் இவர், பாடல், நடன வடிவமைப்பு, நட்டுவாங்கம், ஆடை அலங்காரம் போன்றவற்றில் சிறந்து விளங்குபவர். உலகெங்கும் பரத நாட்டியக் கலையை எடுத்துச் சென்றவர். கனடாவின் டொரொண்டோ பல்கலைக் கழகத்தால் கௌரவிக்கப்பட்டவர். ஸ்ரீபாதம் என்ற நாட்டியப் பள்ளி நடத்தி பல இளைஞர்களை ஊக்குவித்து வருபவர்.
Pin It