புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பாகிஸ்தான் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம்  இன்று நடைபெறுகிறது.

புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பாகிஸ்தான் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம்  இன்று நடைபெறுகிறது. இதில் 15 ஆவது தேசிய சபைக்கு உறுப்பினர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவியேற்கவுள்ளனர். புதிய அரசிடம் அதிகாரங்களை ஒப்படைக்கும் நடைமுறையாக இந்தக் கூட்டம் அமையும். பாகிஸ்தான் நாடாளுமன்றத்தின் அவைத் தலைவர் மற்றும் துணைத் தலைவர் பதவிகளுக்கான தேர்தல்  குறித்த அறிவிப்பு, வரும் புதன் கிழமை வெளியிடப்படும். 342 உறுப்பினர்களைக் கொண்ட பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில், திரு இம்ரான்கானின் தெஹ்ரீக் ஏ இன்ஸாஃப் கட்சி, 158 உறுப்பினர்களுடன் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. திரு இம்ரான் கான் வரும் 18 ஆம்  தேதி பாகிஸ்தானின் 21 ஆவது பிரதமராகப் பதவியேற்றுக் கொள்வார் என்று, தெஹ்ரீக் ஏ இன்ஸாஃப் கட்சி  அறிவித்துள்ளது.

Pin It