புது தில்லியில் காசநோய் ஒழிப்பு மாநாடு – பிரதமர் தொடங்கி வைக்கிறார்

புதுதில்லியில் இன்று காச நோய் ஒழிப்பு மாநாட்டைப் பிரதமர் திரு நரேந்திர மோதி தொடங்கி வைக்கிறார்.  மத்திய சுகாதாரத்துறை அமைச்சகமும், உலக சுகாதார அமைப்பின் தென்கிழக்கு ஆசியப் பிராந்தியப் பிரிவும் இணைந்து இம்மாநாட்டிற்கு ஏற்பாடு செய்துள்ளன.

காசநோய் ஒழிப்பிற்காகத் தேசிய அளவில் எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கை குறித்து மாநாட்டில் விவாதிக்கப்படவுள்ளது.  காசநோயால் பாதிக்கப்பட்டவர்களைக் கண்டறிதல், உரிய சிகிச்சை ஆகியவற்றிற்காக அடுத்த 3 ஆண்டுகளுக்கு 12 ஆயிரம் கோடி ரூபாய் இத்திட்டத்தின் மூலம் செலவிடப்படவுள்ளது.    வரும் 2025ஆம் ஆண்டுக்குள் காசநோயை முற்றிலுமாக ஒழிக்க வேண்டும் என்பது பிரதமரின் நோக்கம் என்று எமது செய்தியாளர் தெரிவிக்கிறார்.       1997ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இத்திட்டத்தின் மூலம் காசநோயால் பாதிக்கப்பட்ட 2 கோடி பேருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.

Pin It