புவி வெப்பமயமாதல் மற்றும் பருவ மாறுபாடுகள் குறித்து உலக நாடுகள் மிகவும் கவனம்  – மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர்  திரு ஹர்ஷ்வர்தன்

புவி வெப்பமயமாதல் மற்றும் பருவ மாறுபாடுகளால் ஏற்படும் அபாயங்கள் குறித்து உலக நாடுகள் மிகவும் கவனம் கொண்டுள்ளன என்று மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் திரு ஹர்ஷ்வர்தன் தெரிவித்துள்ளார். விஞ்ஞானம், ஆன்மீகம், கல்வி மற்றும் சுற்றுச்சூழல் தொடர்பான சர்வதேச மாநாட்டை தில்லியில் துவக்கி வைத்த அவர், சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதற்கு மக்கள் உறுதி ஏற்க வேண்டும் என்று வலியுறுத்தினார். இயற்கையைப் பாதுகாப்பதற்கு எடுக்கப்படும் சிறிய நடவடிக்கைகள் கூட, சுற்றுச்சூழலை மேம்படுத்த முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

Pin It