பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான்  மீண்டும் போர் நிறுத்த ஒப்பந்த மீறல்

ஜம்மு காஷ்மீர் பூஞ்ச் மாவட்டத்திலும், ஆக்னூர் பகுதியிலும் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டு அருகே பாகிஸ்தான் படைகள் நேற்று மீண்டும் துப்பாக்கிச் சூடு் மற்றும் குண்டு வீச்சில் ஈடுபட்டதை அடுத்து இரண்டு எல்லைப் பாதுகாப்புப்   படை வீரர்கள் உட்பட நான்கு பேர் காயமடைந்தனர்.   பூஞ்ச் அருகே  எல்லைக்கட்டுப்பாட்டுப் பகுதியில்  மாலை ஆறு மணி அளவில் இந்திய நிலைகள் மீதும் குடியிருப்புப் பகுதிகள் மீதும் எவ்வித முகாந்திரமும் இன்றி பாகிஸ்தான் படையினர் துப்பாக்கியால் சுட்டனர் என்று பாதுகாப்புத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.   பார்குவால்  பகுதியில் சர்வதேச எல்லை அருகே பாகிஸ்தானிய ரேஞ்சர் படைகள் இந்திய நிலைகள் மீது நேற்று மாலை துப்பாக்கிச்  சூடு நடத்தியதாகவும்  அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.  இதற்கு இந்தியத் தரப்பிலிருந்து ராணுவத்தினர் தகுந்த பதிலடி கொடுத்ததாகவும்  அது தெரிவிக்கிறது.

Pin It