பொங்கல், சங்கராந்தி லோஹ்ரி பண்டிகைகள் – குடியரசுத் தலைவர் வாழ்த்து

பொங்கல், மகர சங்கராந்தி, லோஹ்ரி பண்டிகைகள் கொண்டாடப்படுவதையொட்டிக் குடியரசுத் தலைவர் திரு ராம்நாத் கோவிந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார். தில்லி, ஹிமாச்சலப் பிரதேசம், ஹரியானா, பஞ்சாப் மாநிலங்களில் இன்று லோஹ்ரி பண்டிகை கொண்டாடப்படுகிறது. தென் மாநிலங்களில் பொங்கல் திருவிழாவும் மகரசங்கராந்தியும் நாளை கொண்டாடப்படும். விவசாயிகளின் வாழ்க்கையில் தொடர்புடைய இந்தப் பண்டிகைகள் மகிழ்ச்சியையும் உடல் நலத்தையும் அளிக்கும் என்று நம்புவதாக அவர் வெளியிட்டுள்ள செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

Pin It