பொங்கல் பரிசுத் தொகுப்புத் திட்டம் – முதல்வர்  தொடங்கி வைத்தார்.

பொங்கல் பரிசுத் தொகுப்புத் திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி திரு பழனிச்சாமி தலைமைச் செயலகத்தில் நேற்று தொடங்கி வைத்தார். பயனாளிகள் பத்து பேருக்குப் பொங்கல் பரிசுத் தொகுப்பை அவர் வழங்கினார். அனைத்துக் குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசுத் தொகையான ஆயிரம் ரூபாயுடன் பொங்கல் பரிசுத் தொகுப்பு நாளை முதல் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. 258 கோடி ரூபாய் மதிப்பில் செயல்படுத்தப்படும் பொங்கல் பரிசுத் திட்டத்தினால் இரண்டு கோடியே இரண்டு லட்சம் குடும்ப அட்டைதாரர்கள் பயன்பெறுவார்கள்.

Pin It