பொதுத்துறை வங்கிகளைக் கண்காணிக்க ரிசர்வ் வங்கிக்கு மேலும் அதிகாரம் தேவை – ரிசர்வ் வங்கி ஆளுநர்.

செவ்வாயன்று, பாராளுமன்ற நிதிக் குழுவின் முன் ஆஜரான ரிசர்வ் வங்கி ஆளுநர் டாக்டர் உர்ஜித் படேல், பொதுத்துறை வங்கிகளைக் கண்காணிக்க ரிசர்வ் வங்கிக்கு மேலும் அதிகாரம் அளிக்கப்பட வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார். வாராக்கடன், வங்கி மோசடி, பணத் தட்டுப்பாடு மற்றும் இதர விஷயங்கள் குறித்த இக்குழுவின் கடினமான கேள்விகளை அவர் எதிர்கொண்டார். வங்கி வழிமுறைகளை வலுப்படுத்தத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக உறுதியளித்த அவர், பொதுத் துறை வங்கிகளின் மேல் ரிசர்வ் வங்கி போதிய அதிகாரம் செலுத்த முடியாத நிலை உள்ளது என்றார். பஞ்சாப் வங்கியில், வைர வியாபாரி செய்த மோசடி குறித்து கேட்கப்பட்ட கேள்விகளுக்கு அவர் விளக்கமளித்தார்.

Pin It