போகிப் பண்டிகை இன்று கொண்டாடப்படுகிறது.

பழையன கழிதலும் புதியன புகுதலும் என்ற வாசகத்திற்கேற்ப பழையனவற்றைக் கழிக்கும் நாளாக போகிக் பண்டிகை இன்று கொண்டாடப்படுகிறது. மக்கள் தேவையற்ற பழைய பொருட்களை வீடுகளுக்கு முன் அதிகாலையில் தெருக்களில் தீயிட்டு எரித்தனர். சிறுவர்கள் தைத் திருநாளை வரவேற்கும் விதமாக மேளம் கொட்டித் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். அதிகாலையில் பனிமூட்டம் அதிகமான காரணத்தால் சாலைகளில் வாகனங்கள் போக்குவரத்து குறைவாகவே இருந்தது. காற்று மாசு ஏற்படுத்தும் பொருட்களை எரிக்கக்கூடாது என்று மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் ஆலோசனை கூறியுள்ளது. புகை மூட்டத்தாலும் பனி மூட்டம் காரணத்தாலும் சென்னை விமான நிலையத்திலிருந்து இன்று அதிகாலை முதல் எந்த விமானமும் புறப்படவில்லை. விமானங்கள் தரையிறங்கவும் அனுமதிக்கபடவில்லை.

Pin It