போகி, பொங்கல், மகர சங்கராந்தி உள்ளிட்ட பண்டிகைகள் நாளை முதல் கொண்டாடப்படுவதை முன்னிட்டு, நாட்டு மக்களுக்கு குடியரசுத் தலைவர் திரு ராம்நாத் கோவிந்த் வாழ்த்து.

போகி, பொங்கல், மகர சங்கராந்தி உள்ளிட்ட பண்டிகைகள் நாளை முதல் கொண்டாடப்படுவதை முன்னிட்டு, நாட்டு மக்களுக்கு குடியரசுத் தலைவர் திரு ராம்நாத் கோவிந்த் வாழ்த்துத் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொண்டாடப்படும் பொங்கல் பண்டிகை வடமாநிலங்களில் மகர சக்கராந்தி என்று அழைக்கப்படுகிறது. விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் கடின உழைப்பால் கிடைக்கும் பயன்களை அவர்கள் முழுமையாக அனுபவிக்க வேண்டும் என்று வாழ்த்துவதாக குடியரசுத் தலைவர் கூறியுள்ளார். இந்த நல்ல நாட்களில் பொது மக்களின் வாழ்க்கை வளம் பெற வேண்டும் என்று தாம் விரும்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Pin It