போர்பந்தர் அருகே நீரில் சிக்கித் தவித்த எட்டு மீனவர்கள் பத்திரமாக மீட்பு.

அரபிக் கடலில் போர்பந்தர் அருகே நீரில் சிக்கித் தவித்த எட்டு மீனவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். போர்பந்தர் அருகே, 27 கடல் மைல் தூரத்தில் மீனவர்கள் சிக்கித் தவிப்பதாக கடலோரக் காவல்படையினருக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, சி-445 கப்பல் மூலம் அப்பகுதிக்கு விரைந்த கடலோரக் காவல்படையினர், கடலில் சிக்கித் தவித்த எட்டு மீனவர்களை பத்திரமாக மீட்டனர்.

கடல் கொந்தளிப்பு காரணமாக, மீனவர்கள் வந்த படகு கடலில் மூழ்கியபோது, உயிர் பிழைக்க எண்ணிய மீனவர்கள் எட்டு பேரும் கடலில் குதித்து தவித்துக் கொண்டிருந்ததாக கடலோரக் காவல்படையினர் தெரிவித்தனர்.

Pin It