மகாராஷ்டிராவில் நக்சலைட்டுகள் ஆதிக்கம் உள்ள நான்கு வாக்குச் சாவடிகளில் மறுவாக்குப் பதிவு.

மகாராஷ்டிராவில் நக்சலைட்டுகள் ஆதிக்கம் உள்ள நான்கு வாக்குச் சாவடிகளில் மறுவாக்குப் பதிவு நடத்த அம்மாநில தலைமைத் தேர்தல் அதிகாரி உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து, அந்த வாக்குச் சாவடிகளில் இன்று காலை ஏழு மணி முதல் பிற்பகல் மூன்று மணி வரை வாக்குப் பதிவு நடைபெறும் என தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

முதற்கட்ட தேர்தல் நடைபெற்ற கடந்த 11 ஆம் தேதி நக்சலைட்டுகளுக்கும், பாதுகாப்புப் படையினருக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடைபெற்றதோடு, இரண்டு இடங்களில் குண்டுவெடிப்பு சம்பவங்களும் நிகழ்ந்ததால், மறுவாக்குப் பதிவுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

Pin It