மக்களவைத் தேர்தல் ஏற்பாடுகள் குறித்து மத்திய பார்வையாளர்களுடன் தேர்தல் ஆணையம் நேற்று ஆலோசனை.

மக்களவைத் தேர்தல் ஏற்பாடுகள் குறித்து மத்திய பார்வையாளர்களுடன் தேர்தல் ஆணையம் நேற்று ஆலோசனை நடத்தியது. தேர்தல் பணியின் போது, மத்திய பார்வையாளர்களின் கடமைகள் மற்றும் பணிகள் குறித்து இக்கூட்டத்தில் எடுத்துரைக்கப்பட்டது. இம்மாதத் தொடக்கத்தில் மக்களவைத் தேர்தல் அறிவிக்கப்பட்ட பின், தேர்தல் பார்வையாளர்களுடன்  நேற்று முதல்முறையாக ஆலோசிக்கப்பட்டது. தேர்தல் நடைமுறைகள் முடிவுக்கு வரும்வரை, மத்திய பார்வையாளர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

Pin It