மதுரை மக்களவைத் தொகுதி வாக்கு எண்ணிக்கை மையத்தில் அனுமதியின்றி அதிகாரி நுழைந்தது தொடர்பாக, தேர்தல் ஆணையத்திற்கு அறிக்கை அனுப்பப்படும் – கூடுதல் தலைமைத் தேர்தல் அலுவலர் திரு எம் பாலாஜி.

மதுரை மக்களவைத் தொகுதி வாக்கு எண்ணிக்கை மையத்தில் அனுமதியின்றி அதிகாரி நுழைந்தது தொடர்பாக, தேர்தல் ஆணையத்திற்கு அறிக்கை அனுப்பப்படும் என்று கூடுதல் தலைமைத் தேர்தல் அலுவலர் திரு எம் பாலாஜி  தெரிவித்திருக்கிறார். இந்த சம்பவம் தொடர்பாக நேற்று மதுரையில்  மாவட்ட ஆட்சியர், மாநகர காவல்துறை ஆணையர், வேட்பாளர்கள்  மற்றும் முகவர்களிடம் புகார்  மனுக்களைப் பெற்ற பின்னர், அரசு விருந்தினர் மாளிகையில் விசாரணை நடத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இதுகுறித்த விரிவான அறிக்கை தேர்தல் ஆணையத்திற்கு விரைவில்  அனுப்பி வைக்கப்படும் என்றார்.

Pin It