மத்தியப் பிரதேச வியாபம் ஊழல் வழக்கு – டாக்டர் ஜகதீஷ் சாகர் உள்பட, பலருக்கு எதிராக அமலாக்க இயக்ககம்  குற்றப்  பத்திரிகை தாக்கல்.

மத்தியப் பிரதேச வியாபம் ஊழல் வழக்கில் டாக்டர் ஜகதீஷ் சாகர், தேர்வு வாரிய அதிகாரிகள் இருவர் மற்றும் இதர நபர்களுக்கு எதிராக அமலாக்க இயக்ககம் குற்றப்  பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. கருப்புப் பணத்தை மாற்றுவதைத் தடுக்கும் சட்டத்தின்கீழ், இந்தக் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டதாக அரசு அதிகாரிகள் தெரிவித்தனர். குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக, இந்தோர் தனி நீதிமன்றத்தின் முன்பு 2,500க்கும் மேற்பட்ட பக்கங்களைக் கொண்ட புகாரை இந்த இயக்ககம் தாக்கல் செய்துள்ளது. 2014 மார்ச் மாதம் இந்த வழக்கில் முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. மத்தியப் பிரதேச தொழிற்கல்வி தேர்வு வாரிய ஊழல் வழக்கு வியாபம் வழக்கு என அழைக்கப்படுகிறது.

Pin It