மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் திரு தர்மேந்திர பிரதான், எண்ணெய் உற்பத்தி நாடுகளின் பிரதிநிதிகளுடன் சந்திப்பு.

எண்ணெய் உற்பத்தி நாடுகளின் பிரதிநிதிகளை மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் திரு தர்மேந்திர பிரதான் சந்தித்து கச்சா எண்ணெய்ப் பொருட்களின் விலை அதிகரித்து வருவது குறித்து கவலை தெரிவித்தார். இந்த விலை உயர்வு சர்வதேச அளவில், குறிப்பாக, இந்தியாவில், நுகர்வோருக்குப் பெரும் சிரமத்தை ஏற்படுத்தி உள்ளதாகவும் புதுதில்லியில் நேற்று நடைபெற்ற சந்திப்பின்போது அவர்  கூறினார்.

அடிப்படை சந்தையில்  இந்த விலை உயர்வைத் தாங்கும் சக்தி இல்லை என்றும், வாங்கும் சக்தியையும் மீறி பெட்ரோலியப் பொருட்களின் விலை அதிகரித்து  வருவதாகவும் அவர் கூறினார். நியாயமான விலையில் பெட்ரோலியப் பொருட்கள் கிடைப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க எண்ணெய் உற்பத்தி நாடுகள் முன்வரவேண்டும் என்றும் அவர் கேட்டுக்  கொண்டார்.

கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு ஆகியவற்றின் விற்பனையை வெளிப்படைத் தன்மையுடனும் எளிதாகவும் மாற்றவேண்டும் என்றும் அவர் கேட்டுக்  கொண்டார்.  எண்ணெய் உற்பத்தி நாடுகளுடன் இந்தியா வலிமையான ஒப்பந்தங்களை மேற்கொண்டுள்ளதாகவும், இந்த நாடுகளுடனான சர்வதேசக் கருத்தரங்கில் பங்கேற்பதற்காக திரு பிரதான் அடுத்தவாரம் வியன்னா செல்லவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

 

Pin It