மாலத்தீவு அதிபர் தேர்தல் முடிவுகளை எதிர்த்து, அதிபர் திரு அப்துல்லா யாமின் வழக்கு

.மாலத்தீவில் கடந்த மாதம் நடைபெற்ற அதிபர் தேர்தலில் எதிர்க்கட்சிக் கூட்டணி வேட்பாளர் வெற்றி பெற்றதாக வெளியான  முடிவை எதிர்த்து, அதிபர் திரு அப்துல்லா யாமின் அந்நாட்டு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். கடந்த மாதம் 23 ஆம் தேதி நடைபெற்ற இந்தத் தேர்தலில் எதிர்க்கட்சி கூட்டணி முறைகேடுகளில் ஈடுபட்டதாகவும் எனவே தேர்தல் முடிவுகளை செல்லாததாக அறிவிக்க வேண்டும் என்றும் திரு அப்துல்லா யாமின் தரப்பில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது

Pin It