மின் வாகனங்கள் விரிவாக்கத் திட்டங்களில் பங்கேற்க சீனாவுக்கு இந்தியா அழைப்பு.

2030 ஆம் ஆண்டுக்குள் முழுமையான மின்வாகனப் போக்குவரத்து இலக்கை அடைய இந்தியா முன்னெடுத்துள்ள திட்டங்களில் பங்கேற்று, இந்தியாவில் மின்வாகன சந்தை விரிவாக்கத்துக்கு முதலீடு செய்ய, சீன தொழில் நிறுவனங்களை வரவேற்பதாக, நிதி ஆயோக் முதன்மை ஆலோசகர் அனில் ஸ்ரீவாஸ்தவா அவர்கள் கூறியுள்ளார். சீனாவில் இம்மாதம் 11 -13 தேதிகளில் நடைபெற்ற உலக பூஜ்ஜியக் கழிவு மற்றும் மின்வாகனங்கள் உச்சிமாநாட்டில் தொழில் குழுவுடன் பங்கேற்றுப் பேசிய அவர், இவ்வாறு தெரிவித்தார். சீனா ஈவி100 என்ற, 200 பிரபல சீன மின்வாகன நிறுவனங்களை உறுப்பினர்களாகக் கொண்ட சங்கம், இந்த உச்சிமாநாட்டை பீஜிங்கில் ஏற்பாடு செய்தது. இதில் உலகெங்கிலுமிருந்து அரசு மற்றும் தொழில்துறைப் பிரதுநிதிகள் பங்கேற்றனர். இந்த சங்கத்தின் தலைவர் சென் கிங்டாய் அவர்களையும் ஸ்ரீவாஸ்தவா அவர்கள் சந்தித்துப் பேசினார். மிகப் பெரிய அளவிலான இந்திய, சீன சந்தைகள், இருநாட்டு மின்வாகனத் தொழில் நிறுவனங்களுக்கு அபிரிமிதமான வாய்ப்புக்களை வழங்குவதாக அவர் தெரிவித்தார்.

Pin It