மியான்மரில் சிறுபான்மையினக் குழுக்களின் பிரதிநிதிகள் உடனான ஐந்து நாள் மாநாடு நேற்று யாங்கோனில் தொடக்கம்.

மியான்மரில் சிறுபான்மையினக் குழுக்களின் பிரதிநிதிகள் உடனான ஐந்து நாள் மாநாடு நேற்று யாங்கோனில் தொடங்கியது. நிரந்தரமான அமைதியை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட இந்த மாநாட்டின் 3 ஆவது அமர்வு இது. சென்ற மே மாதமும், 2016 ஆகஸ்ட் மாதமும் நடைபெற்ற மாநாடுகளைத் தொடர்ந்து இந்த மாநாடு நடைபெறுகிறது.

அரசு, ராணுவம், சிறுபான்மை புரட்சிக் குழுக்கள் ஆகியவற்றுக்கு இடையிலான இந்தப் பேச்சுக்கள், இந்தக் குழுக்களுக்கு மேலும் அதிக சுயாட்சி உரிமை வழங்குவது பற்றிய கருத்து  வேறுபாடுகளைத் தீர்க்க இயலவில்லை. இந்த மாநாட்டில் சிறுபான்மையினப் பிரதிநிதிகளுடன் மியான்மர் தலைவர்  திருமதி ஆங் சான் சூ கி மற்றும் நாட்டின் ராணுவத் தளபதிகள் பங்கேற்கின்றனர்.

Pin It