மியான்மர் வன்முறை குறித்து ஐ நா பாதுகாப்புச் சபை கவலை.

மியான்மர் நாட்டின் ராக்கைன் மாநிலத்தில் ஏற்பட்டுள்ள வன்முறைகள் குறித்து ஐநா பாதுகாப்புச்சபை நேற்று கவலை தெரிவித்தது.  இந்தப் பகுதியிலிருந்து சுமார் மூன்று லட்சத்து 80 ஆயிரம் ரோஹிங்கியா முஸ்லீம் மக்கள் வெளியேற கட்டாயப்படுத்தப்பட்டுள்ளனர்.   15 உறுப்பினர்கள் கொண்ட பாதுகாப்பு சபை வெளியிட்ட அறிக்கையில் இந்தப் பகுதியில் பாதுகாப்பு நடவடிக்கையின்  போது அதிகமான வன்முறைகள் எல்லை மீறியது குறித்துக் கவலை தெரிவிக்கப்பட்டது.

ராக்கைன் பகுதியில் வன்முறையை முடிவுக்கு கொண்டுவரவும், பதற்றத்தைத் தணிக்கவும், சட்டம் ஒழுங்கை நிலைநிறுத்தவும் அப்பாவி மக்களைப் பாதுகாக்கவும் உடனடி நடவடிக்கை எடுக்குமாறு அந்த அறிக்கை கேட்டுக்கொள்கிறது.

Pin It