மீனவர்களைக் காப்பாற்றத் தொடரும் முயற்சிகள்

ஒக்கி புயலின் போது கடலில் காணாமல் போன மீனவர்களில் இது வரை 367 பேர் மீட்கப்பட்டுள்ளதாகவும் அதில் 234 பேர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் என்றும் பாதுகாப்புத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. தேடும் பணியில் ஈடுபட்ட இந்தியக் கடலோரக் காவல் படையின் சாம்ராட் கப்பல் 115 மீன்பிடிப் படகுகளில் இருந்த 184 மீனவர்களை லட்சத்தீவு அருகேயும் பித்ரா தீவு அருகே 13 படகுகளில் தத்தளித்துக்கொண்டிருந்த 162 தமிழக மீனவர்களையும் காப்பாற்றியது. காப்பாற்றப்பட்ட மீனவர்களுக்கு முதலுதவியும் உணவுப் பொருட்களும் வழங்கப்பட்டதாகவும்  கடலோரக் காவல்படை கூறியுள்ளது. காணாமல் போன தமிழக மீனவர்கள் மேலும் சிலரைத் தேடும் பணியில் உள்ளூர் மீனவர்கள் 30 பேர் உதவியுடன் கடலோரக் காவல்படையின் படகுகள் ஈடுபட்டிருப்பதாகவும் பாதுகாப்பு அமைச்சகச் செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.

Pin It