முதலாவது உலகப்போரின்போது  பிரிட்டனுக்காகப் போராடி உயிர்த்தியாகம் செய்த இந்திய வீர்ர்களுக்கு லண்டனில் நினைவுச் சின்னம்.

முதலாவது உலகப்போரின்போது உயிர்த்தியாகம் செய்த இந்தியா உள்ளிட்ட காமன்வெல்த் நாடுகளைச் சேர்ந்த 30 லட்சம் வீரர்களின் நினைவாக லண்டனில் நினைவுச் சின்னம் அமைக்கப்படும் என இங்கிலாந்து அரசு அறிவித்துள்ளது.

முதலாவது உலகப்போரில் இங்கிலாந்து, ரஷ்யா, அமெரிக்கா ஆகிய நாடுகளின் கூட்டுப்படைகள் வெற்றி பெறுவதற்கு இந்த வீரர்கள் அளப்பரிய பங்கினை ஆற்றியுள்ளனர். இதன் நினைவாக, வரும் ஞாயிற்றுக் கிழமை தில்லி போர் நினைவுச் சின்னத்தில் மரியாதை செலுத்தப்படவுள்ளது.

Pin It