முதலாவது கனரக ஹெலிகாப்டர் சினூக் இந்தியா வந்தடைவு.

இந்திய விமானப்படைக்கான சினூக் எனப்படும் 15 கனரக ஹெலிகாப்டர்கள் கொள்முதல் செய்ய ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தத்தின்படி, முதலாவது சினூக் ஹெலிகாப்டர் நேற்று இந்தியா வந்தடைந்துள்ளது. குஜராத்திலுள்ள முந்த்ரா துறைமுகத்தை வந்தடைந்த சிஎச் 47 எஃப்(ஐ) என்ற இந்த ஹெலிகாப்டர், பின்னர் சண்டிகர் விமானப்படைத் தளத்துக்கு அனுப்பப்படும். போயிங் நிறுவனத்தால் வழங்கப்பட்ட இந்த ஹெலிகாப்டர், இந்திய விமானப் படையின் வான்வழி உயரத் தூக்கும் செயல்திறனை வெகுவாக அதிகரிக்கும். 10 டன் எடையைத் தூக்க வல்ல இந்த ஹெலிகாப்டர், குறிப்பிட்ட காலக் கெடுவுக்கு முன்னதாகவே வழங்கப்பட்டுள்ளது.

300 கோடி டாலர் செலவில், சினூக் எனப்படும் 15 கனரக ஹெலிகாப்டர்கள் மற்றும் 22 ஏஎச் – 64 இ அபாசி தாக்குதல் ஹெலிகாப்டர்கள் ஆகியவற்றைக் கொள்முதல் செய்ய, இந்தியா, அமெரிக்காவுடன் 2015 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஒப்பந்தம் செய்து கொண்டது.

 

Pin It