முதுமலை புலிகள் காப்பகப் பகுதியில் குடியிருப்பவர்களின் மறுவாழ்வுக்கு மத்திய அரசு 70 கோடி ரூபாய் ஒதுக்கீடு.

முதுமலை புலிகள் காப்பகப் பகுதியை ஒட்டிய குடியிருப்புப் பகுதிகளில் உள்ளவர்கள்  இடம்பெயரும் வகையில் மறுவாழ்வு அளிப்பதற்காக மத்திய அரசு 70 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாக சுற்றுச் சூழல் மற்றும் வனத்துறை அமைச்சர் டாக்டர்  ஹர்ஷவர்தன் கூறியுள்ளார். இந்தக் காப்பகத்தை நேற்று ஆய்வு செய்த பின்னர்  செய்தியாளர்களிடம் அவர் பேசினார். இந்தத் திட்டத்திற்கான மாநில அரசின் பங்கீட்டை விரைவில் வழங்குமாறு அறிவுறுத்தப்பட்டிருப்பதாகவும் அமைச்சர்  குறிப்பிட்டார். வனவிலங்குகளால் ஏற்படும் உயிரிழப்புக்கு, பிற மாநிலங்களில் ஐந்து லட்சம் ரூபாய் வழங்கப்படுவதை சுட்டிக்காட்டிய அவர், தமிழக அரசும் இதனை செயல்படுத்த முன்வரவேண்டும் என்று கேட்டுக் கொண்டார். வனப் பகுதியில் வாழும் வனவிலங்குகள்  நடமாட்டத்திற்கு இடையூறாக இருக்கும் பார்த்தீனியச் செடிகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று டாக்டர் ஹர்ஷவர்தன் கூறினார்.

Pin It