முப்படைகளின் துணைத் தளபதிகளுக்கு நிதியைக் கையாள்வதற்கு கூடுதல் அதிகாரங்கள்.

பாதுகாப்புத்  துறையில் முப்படைகளின் துணைத் தளபதிகளுக்கு நிதியைக் கையாள்வதற்கு கூடுதல் அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன. முப்படைகளின் செயல்பாட்டை மேம்படுத்தும் வகையில் இந்த நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது. இதன்படி, 500 கோடி ரூபாய் வரை துணைத் தளபதிகள் கையாள்வதற்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

ஆயுதங்களைக் கையாளுதல் மற்றும் நிர்வாக வசதிகளுக்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என, பாதுகாப்புத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்  குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Pin It