மும்பையில் பாபா அணு ஆராய்ச்சிக் கழகத்தின் கண்காட்சிக்கு குடியரசுத் தலைவர் வருகை.

டிராம்பேயிலுள்ள பாபா அணு ஆராய்ச்சிக் கழகத்தில், அணுசக்தித் துறையின் தொழில்நுட்பக் கண்காட்சிக்கு, குடியரசுத் தலைவர் திரு ராம்நாத் கோவிந்த், செவ்வாயன்று வருகை புரிந்தார். அப்போது, கல்பாக்கத்தின் உலோக எரிபொருள் பின் தயாரிப்புக் கட்டமைப்பு, ஒருங்கிணைந்த பேரிடர் மேலாண்மை மையம் உள்ளிட்ட அணுசக்தித் துறையின் கட்டமைப்புக்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார். கேன்சர் நோயாளிகளுக்கான சிகிச்சைக் கட்டமைப்பையும் அவர் நாட்டுக்கு அர்ப்பணித்தார். பாபா அணு ஆராய்ச்சிக் கழகத்தின் ஆராய்ச்சியில் உருவான, டிசிடிஎம்-1 என்ற நெல் ரகத்தை, அணுசக்தித் துறையின் தலைவர் திரு சேகர் பாபு, குடியரசுத் தலைவருக்கு அளித்தார்.

நிகழ்ச்சியில் பேசிய குடியரசுத் தலைவர், எரிசக்தி, வேளாண்மை, மருத்துவம், கழிவு மேலாண்மை போன்ற பலதரப்பட்ட துறைகளில் அணுசக்தித் தொழில்நுட்பத்தை உபயோகிக்கும் முன்னணி நாடுகளுள் இந்தியாவும் ஒன்று என்று அங்கீகரிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார். இத்துறைகளில் இந்திய விஞ்ஞானிகளின் பங்களிப்பு பாராட்டுக்குறியது என்று அவர் கூறினார். நிகழ்ச்சியில் மஹாராஷ்டிர மாநில ஆளுநர் திரு வித்யாசாகர் ராவ், மாநிலக் கல்வியமைச்சர் திரு வினோத் தவ்டே ஆகியோர் பங்கேற்றனர்.

Pin It