மேற்காசிய அமைதிப் பேச்சுகள் மீண்டும் தொடர வேண்டுமென ஃப்ரான்ஸ் அதிபர் கேட்டுக்கொண்டார்.

 

நீண்டகாலமாக நின்று போயுள்ள இரண்டு நாடுகள் தீர்வு அடிப்படையிலான  மேற்காசியா அமைதிப் பேச்சுகளை மீண்டும் தொடர வேண்டும் என ஃப்ரான்ஸ் அதிபர் திரு இமானுவேல் மேக்ரான் கேட்டுக்கொண்டுள்ளார்.

இஸ்ரேல் பிரதமர் திரு பெஞ்சமின் நேத்தன்யாகுவுடன் பேச்சுக்கள் நடத்திய பிறகு நேற்று இதைத் தெரிவித்த மேக்ரான் இதற்கென அனைத்து தூதரக முயற்சிகளுக்கும் உதவ ஃப்ரான்ஸ் தயாராக உள்ளது என்றார்.

ஜெருசலத்தைத் தலைமையிடமாகக் கொண்டு அங்கீகரிக்கப்பட்ட பாதுகாப்பான  எல்லைகளுடன் இஸ்ரேலும், பாலஸ்தீனமும் இணைந்து வாழ வகை செய்யப்பட வேண்டும் என்றார்.

 

Pin It