யுனெஸ்கோவிலிருந்து அமெரிக்கா வெளியேறுவது குறித்துக் கவலை இல்லை – யுனெஸ்கோவின் புதிய தலைவர்.  

யுனெஸ்கோ அமைப்பிலிருந்து வெளியேறுவதாக அமெரிக்கா எடுத்துள்ள முடிவைத் தாம் பொருட்படுத்தவில்லை என  யுனெஸ்கோ அமைப்பின் புதிய தலைவர் கூறியுள்ளார். அமெரிக்கா இதில் பங்கு பெறும் காலத்துக்கு முன்பே நீண்ட காலமாக அமெரிக்கா இல்லாமல் இந்த அமைப்பு செயல்பட்டு வந்துள்ளது என்று அவர் கூறியுள்ளார். யுனெஸ்கோவின் புதிய தலைவராக வெள்ளிக்கிழமை தேர்ந்தெடுக்கப்பட்ட ஃப்ரான்ஸ் நாட்டின் முன்னாள் கலாச்சாரத் துறை அமைச்சர் ஆட்ரே அஸௌலே அவர்கள், எந்த ஒரு அமைப்பும் அமெரிக்காவுடன் தொடங்கப்படுவதோ முடிவு பெறுவதோ இல்லை எனக் கூறினார். இஸ்ரேலுக்கு எதிராக ஒரு தலை பட்சமாகச் செயல்படுவதாக யுனெஸ்கோ மீது குற்றம் சாட்டி, இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா கடந்த மாதம் யுனெஸ்கோவிலிருந்து வெளியேறும் முடிவை எடுத்தன. அமெரிக்காவின் தற்போதைய பன்முகச் சார்பான நிலைப்பாட்டை மனதில் கொண்டு நோக்கும் போது, இந்த முடிவு பெரிய வியப்பை ஏற்படுத்தவில்லை என்று இன்று பதவியேற்கவுள்ள நிலையில் அஸௌலே தெரிவித்துள்ளார்.

Pin It